புதுடில்லி : மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி செயல்படுவதாக கர்நாடக அரசு மீது, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. மேகதாதுவில் அணை கட், திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது. அணை விவகாரம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கை தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க கர்நாடக அரசிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-dinamalar.com