சென்னை: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போலவே தமிழக அரசு தமிழகத்தில் 3000 பகுதிகளின் பெயர்களை மாற்ற போகிறது.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அலகாபாத் மற்றும் பைசாபாத் நகரங்களின் பெயர்களை மாற்றினார். அலகாபாத், பிரயாக்ராஜ் என்று மாறியது. பைசாபாத் அயோத்யா என்று மாற இருக்கிறது. இன்னும் சில நகரங்களின் பெயர்களை மாற்றும் யோசனையில் இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் சில நகரங்களின், ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட உள்ளது.
எத்தனை பெயர்
மொத்தம் தமிழக அரசு தமிழகத்தில் 3000 பகுதிகளின் பெயர்களை மாற்ற போகிறது. இதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களுடன் ஆலோசனை செய்து இந்த இடங்களின் பெயர்கள் மாற்றப்படும்.
எந்த இடங்கள் மாற்றப்படும்
அதன்படி டிரிப்பிளிகேன் பழையபடி திருவல்லிக்கேணி என்று மாற்றப்படும். திருச்சி, திருச்சிராப்பள்ளி என்று மாற்றப்படும். டூட்டிகோரின் தூத்துக்குடி என்று மாற்றப்படும். பூந்தமல்லி பூவிருந்தமல்லி என்று மாற்றப்படும். இதேபோல் பல முக்கியமான இடங்களின் பெயர்கள் பழைய பெயர்களே மாற்றப்பட உள்ளது.
ஆனால் என்ன
ஆனால் இதில் சமஸ்கிருத பெயர்கள் எதுவும் மாற்றப்படாது. ஆங்கில பெயர்கள் மட்டுமே மாற்றப்பட உள்ளது. மேலும் ஜாதி, மதம் ஊர் பெயர்களில் இருந்தால் அது மாற்றப்படாது. ஆங்கிலத்தை மட்டுமே மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
பெரும் விமர்சனம்
தமிழக அரசின் இந்த நடவடிக்கை விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது. மாற்ற வேண்டும் என்றால் சமஸ்கிருத பெயர்களையும் மாற்ற வேண்டும். அதுவும் கூட வரலாறு படி உண்மையான தமிழ் பெயர் கிடையாது. அதை மட்டுமே ஏன் மாற்றாமல் இருக்கிறார்கள். தமிழக அரசு யோகி ஆதித்யநாத்தை பின்பற்றி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்று விமர்சனம் எழுந்துள்ளது.