குழந்தைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பான, யுனிசெஃப், தமிழ்நாடு சமூக நலத்துறை மற்றும் ஐ.சி.சி.டபிள்யூ., என்ற, குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, ‘தமிழகத்தில் குழந்தை திருமணங்களின் நிலையும், அதை தடுப்பதற்கான வழிமுறைகளும்’ என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை, நேற்று சென்னையில் வெளியிட்டன.
தமிழகத்தில், வறுமை, பாதுகாப்பின்மை, காதல், கடத்தல், பெற்றோரின் நோய் உள்ளிட்ட காரணங்களால், குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. இதில், பெண் குழந்தைகள் மட்டும்தான் பாதிக்கப்படுகின்றன. 2017ல் மட்டும், 1,636 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தப்பட்டன. அவர்களில், 25 சதவீதம் பேர் சுய விருப்பத்தினாலும், 75 சதவீதம் பேர், பெற்றோர், உறவினர், நண்பர்களின் வற்புறுத்தலாலும், திருமணம் செய்ய சம்மதித்தவர்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. -BBC_Tamil