2014 நாடாளுமன்ற தேர்தலின்போது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என பிரதமர் நரேந்திர மோதி வாக்குறுதி அளித்தார். மேலும் 2016-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்வது குறித்து தகவல் வராத நிலையில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அதாவலே இது குறித்து தகவல் தெரிவித்திருப்பதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
” ரிசர்வ் வங்கியில் அவ்வளவு தொகை இல்லாததால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. வெகுவிரைவில் குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடப்படும் என நம்புகிறேன்” என மகாராஷ்டிராவில் நேற்று மத்திய அமைச்சர் பேசியுள்ளார் என்கிறது அந்த செய்தி. -BBC_Tamil