புதுடில்லி: தலைநகர் டில்லியில் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் பனிமூட்டம் காரணமாக காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகி்ன்றன.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக காற்றுமாசினால் டில்லி நகரமே தூசு மண்டலாமாக மாறிவருகிறது. காற்று மாசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசக்கோளாறும், மூச்சு திணறல் ஏற்பட்டதால் இன்று எய்மஸ் மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக குவிந்த வண்ணம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-dinamalar.com