துாத்துக்குடி : பள்ளி செல்லும் குழந்தைகளை போராட்டத்தில் ஈடுபடுத்தியதாக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, சட்டசபையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்’ என, துாத்துக்குடியில் சிலர், தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்கள், நேற்று முன்தினம், தங்கள் குழந்தைகளுடன், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, பள்ளி செல்லும் குழந்தைகளை போராட்டத்தில் ஈடுபடுத்தியதற்காக, தமிழர் கூட்டமைப்பு, தமிழ் புலிகள் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணி ஆகியோர் மீது, சிப்காட் போலீசார், மூன்று பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
-dinamalar.com