‘சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது’

பத்தனம்திட்டா,: ‘சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு, பாதுகாப்பு வழங்க முடியாது’ என, கேரளா போலீஸ் தெரிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், ‘அனைத்து வயது பெண்களை அனுமதிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெண்கள், ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்றனர்.அவர்களுக்கு, கேரள அரசு, போலீஸ் பாதுகாப்பு வழங்கியது. ஆனால் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பெண்கள் பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்டனர். ‘சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு இனி பாதுகாப்பு வழங்க முடியாது’ என கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.

சன்னிதான சிறப்பு : அதிகாரியான கேரள டி.ஜி.பி., லோக்நாத் பெஹ்ராவிடம், போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் விளம்பரத்துக்காகவே வருகின்றனர். இந்த பெண்களை கோவிலுக்குள் அனுமதிப்பதால், விபரீத விளைவுகள் ஏற்படக்கூடும். எனவே, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-dinamalar.com

TAGS: