பீரங்கிகளை வாங்கி குவிக்கிறது பாக்.,: எல்லையில் வாலாட்ட, ‘பகீர்’ திட்டம்?

புதுடில்லி:அண்டை நாடான பாகிஸ்தான், நம் எல்லையை ஒட்டிய பகுதிகளில் நிறுத்துவதற்காக, 600 அதி நவீன பீரங்கிகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக, புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

நம் ராணுவத்தில், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய, நவீன பீரங்கிகளை வாங்குவதில், மந்தநிலை காணப்படுகிறது. இந்த சூழ்நிலை யில், 600 அதிநவீன பீரங்கிகளை வாங்கி குவிக்க, பாக்., திட்டமிட்டுள்ளது.இந்த பீரங்கிகள், நம் நாட்டின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் நிறுத்தப்படும் என தெரிகிறது. ‘இவற்றில், ரஷ்யாவின், அதிநவீன, ‘டி – 90′ ரக பீரங்கிகளும் இருக்கும்’ என, புலனாய்வு தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து, புலனாய்வு அமைப்புகள் மேலும் கூறியதாவது:பாக்., வாங்கவுள்ள பீரங்கிகளில் பெரும்பாலானவை, 3 – 4 கி.மீ., துார இலக்குகளை தாக்கி அழிக்க வல்லவை. இவற்றை, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை ஒட்டியுள்ள, எல்லை பகுதியில் நிறுத்த, பாக்., ராணுவம் திட்டமிட்டு உள்ளது.இவை தவிர, அதிநவீன தானியங்கி துப்பாக்கிகள், 245ஐ, ஐரோப்பிய நாடான இத்தாலியிடம் இருந்து வாங்க, பாக்., திட்டமிட்டு உள்ளது. இவற்றில்,

120 துப்பாக்கிகள், ஏற்கனவே சப்ளை செய்யப்பட்டு விட்டன.

ரஷ்யாவின் நீண்ட கால நட்பு நாடாக, நம் நாடு திகழ்ந்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து, பல்வேறு ஆயுத தளவாடங்களை, நாம் வாங்கி வருகிறோம்.இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து, டி- 90 ரக பீரங்கிகளை வாங்க முடிவு செய்துள்ள, பாக்., இதன் மூலம், ரஷ்யாவுடனான ராணுவ நட்புறவை பலப்படுத்த விரும்புகிறது.

ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வரும், பாக்., சில ஆண்டுகளாக, ரஷ்யாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது, நமக்கு கவலை அளிக்கத்தக்க விஷயமாக, ராணுவ வட்டாரங்களில் பேசப்படுகிறது.கடந்த ஓராண்டாக, ஜம்மு – காஷ்மீர் மாநில எல்லையை ஒட்டிய பகுதியில், இந்தியா – பாக்., இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், எல்லையோர பகுதிகளில் பயன்படுத்தும் வகையில், பீரங்கிகளை வாங்கி குவிக்க, பாக்., முடிவு செய்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நம் ராணுவத்தை பொறுத்த வரை, பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கை களில் மட்டுமே தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. இவ்வாறுஅந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தற்போது, நம்மிடம், டி – 90, டி – 72 பீரங்கிகளும், அர்ஜுனா ரக பீரங்கிகளும் அதிகளவில் உள்ளன. பாக்.,கிடம் தற்போதுள்ள போர் தளவாடங்களை ஒப்பிடுகையில், இவை மிக உயர்ந்த தரம் உடையவை. இதை ஈடுகட்டும் வகையில்,

பாக்.,கின் தற்போதைய நடவடிக்கைகள் உள்ளன.

ரஷ்யாவிடம் ராணுவ பீரங்கிகள் வாங்குவதோடு, சீனாவிடம் இருந்து, ‘விடி – 4’ வகை பீரங்கிகள், உக்ரைனிடம் இருந்து, ‘ஆப்லாட் – பி’ போர் பீரங்கிககளை, பாக்., வாங்க உள்ளது. இவற்றை, பாக்., ராணுவம், ஏற்கனவே சோதித்து பார்த்துள்ளது.

அளவு கடந்த தாமதம்!

இந்திய ராணுவத்தில், நவீன பாதுகாப்பு அம்சங் களுடன் கூடிய கவச பீரங்கிகளை வாங்குவ தில் அளவு கடந்த தாமதம் ஏற்படுவ தாக, ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த வகை பீரங்கிகளை வாங்குவதற்கான நடை முறைகளால், தாமதம் ஏற்படுவதாகவும், இந்த பிரச்னை குறித்து, அரசின் உயர் மட்டத்தில் ஆராயப்படுவதாகவும் கூறப்படுகிறது.’நம் ராணுவத்தில் உள்ள பீரங்கிகளில் பெரும்பாலா னவை, லடாக் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு ள்ளன. இவை போதாது’ என, நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

-dinamalar.com

TAGS: