2018ல் தமிழகத்தில் இயல்பை விட குறைவான மழை

சென்னை: முடிவடையும் 2018 ஆண்டு முழுவதும் தமிழகத்தில் இயல்பை விட குறைவான மழையே பெய்துள்ளது என வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.

2018 ஆண்டு முழுவதும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 79 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 14 சதவிகிதம் குறைவாகும். தென்மேற்கு பருவமழை 28 செ.மீட்டர் பெய்துள்ளது. இது இயல்பைவிட 12 சதவிகிதம் குறைவு. வடகிழக்கு பருவமழை 34 செ.மீ., பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 24 சதவிகிதம் குறைவு. 

திருநெல்வேலியில் மட்டுமே அதிக மழை

தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சென்னை ஆகிய 4 மாவட்டங்களில் 50 சதவிகிதத்திற்கும் குறைவான மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமே வழக்கத்தை விட கூடுதலாக 11 சதவிகிதிம் மழை பெய்துள்ளது. 15 மாவட்டங்களில் 1 முதல் 19 சதவீதம் வரை குறைவான மழை பெய்துள்ளது.
கஜா புயல் தவிர ஏனைய புயல்கள் மழையை தரவில்லை. மேலும் மழைக்கு வேண்டிய அடிப்படை சாதகமான சூழல் நிகழவில்லை. எல்நினோ உருவாகாததால் மழை பெய்யும் வாய்ப்பு இல்லாமல் போனது.

சென்னையை பொறுத்தவரை இயல்பைவிட 55 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. வழக்கமாக 79 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு 35 செ.மீ. மழையே பதிவாகி உள்ளது.இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

-dinamalar.com

TAGS: