பொன் மாணிக்கவேல் பணிகள் முடக்கம்? ஒரு மாதமாகியும் அறை ஒதுக்கவில்லை

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சிறப்பு அதிகாரியாக, ஐ.ஜி., பொன் மாணிக்கவேலை, உயர் நீதிமன்றம் நியமித்து, ஒரு மாதமாகியும், அவருக்கு அலுவலகம் ஒதுக்கப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக, ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற, ஐ.ஜி., பொன் மாணிக்கவேலை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி யாக, சென்னை, உயர் நீதிமன்றம், நவ., 30ல் நியமித்தது.சிறப்பு அதிகாரியாக நியமித்து, ஒரு மாதமாகியும், சென்னையில், பொன் மாணிக்கவேலுக்கு அலுவலகம் ஒதுக்காமல், காவல் துறை உயர் அதிகாரிகள், வஞ்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து,சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது: அயல்பணி என்றஅடிப்படையில், கூடுதல், எஸ்.பி., இளங்கோ உள் ளிட்ட, 208 பேர், பொன் மாணிக்க வேல் தலைமை யின் கீழ், பணியாற்றி வந்தனர். அவர்களில், 125 பேரை, ஏற்கனவே பணி புரிந்த இடங்களுக்கு, பொன் மாணிக்கவேல் அனுப்பி விட்டார். அவர்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட, எஸ்.பி.,க்கள், மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், 125 பேரில், சிலருக்கு மட்டும் தான் பணி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மற்றவர்களிடம், ‘டி.ஜி.பி., அலுவலகம்சென்று, ரிப்போர்ட் செய்தால் தான் பணிக்கு எடுத்துக் கொள்வோம்’ என, உயர் அதிகாரிகள் அழுத்தம் தருவதாக தெரிகிறது.

இதனால், 125 பேரில், 88 பேர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் தான் பணியாற்றுவோம் என, அடம் பிடித்து வருகின்றனர்.மாநிலத்தின் பல பகுதியில் பணி புரியும் போலீசார், 390 பேர், பொன் மாணிக்கவேல் தலைமையின் கீழ் பணி யாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். பொன் மாணிக்கவேலுக்கு, சென்னையில் அலுவலகம் ஒதுக்காமல், டி.ஜி.பி., அலுவலகம் வஞ்சித்து வருவதால், சிலை திருட்டு தொடர்பான புலன் விசாரணை,முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

-dinamalar.com

TAGS: