முல்லை பெரியாறு.. கேரளாவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. தமிழக அரசு அதிரடி

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில், தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆய்வுகளில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிறகும், வீணாக புரளிகளை கிளப்பி அணை பாதுகாப்பு தொடர்பாக அவ நம்பிக்கைகளை கேரள அரசு எழுப்பி வருகிறது. முல்லை பெரியாறு பகுதியில், புதிய அணை ஒன்று கட்டப்பட வேண்டும் என்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைச் செய்து வருகிறது கேரள அரசு. இது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு எதிரானது என்பதால், கேரளா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: