காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார்; நார்வே பிரதமர் பேட்டி

புதுடில்லி: இந்தியா -பாக். நாடுகள் விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய தயார் என நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் கூறினார் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள நார்வே பிரதமர் எர்னாசோல்பெர்க், நேற்று டில்லியில்நடந்த வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார்.

இன்று பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார்.நேற்று அவர் அளித்தபேட்டியில், காஷ்மீர் விவகாரத்தில் ராணுவம் தீர்வுகாணமுடியாது. இந்தியாவும், பாகிஸ்தானும் விரும்பினால், நார்வே மத்தியஸ்தராக இருந்து பிரிவினைவாத தலைவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட தயார் என்றார்.

-dinamalar.com

TAGS: