ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுப்படுவதால் ஆலையை மூடக்கோரி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பெரும் கலவரம் மூண்டது. கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. ஆலையில் இருந்து ரசாயனங்கள் அகற்றப்பட்டன.

இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.

இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். தூத்துக்குடி பகுதியில் பொதுமக்களை சந்தித்து கருத்துகளை கேட்டனர். இதன்பிறகு ஆய்வு அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அதில் 25 நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என இன்று உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது.

மேலும் இந்த தீர்ப்பின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையையும் நிறுத்தி வைத்துள்ளது.

-athirvu.in

TAGS: