வீடு திரும்ப முடியாத கள்ள பயண பெண்கள்

திருவனந்தபுரம் : ஜனவரி 2 ம் தேதியன்று கள்ளத்தனமாக சபரிமலை சென்ற 2 பெண்களும் தற்போது தொடர் எதிர்ப்பு காரணமாக தங்களின் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்.

கம்யூ., கொள்கைகளை கொண்ட பிந்து (40), கனகதுர்கா (39) என்ற 2 பெண்கள் ஜன.,2 அன்று கள்ளத்தனமாக சபரிமலைக்கு சென்றனர். இதனால் அவர்களுக்கு தொடர் எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

ரகசிய இடம்:

இதன் காரணமாக அவர்கள் இருவரும் கொச்சிக்கு வெளியே ரகசிய இடத்தில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வருவதால் போலீசார் தங்களை ரகசிய இடத்தில் தங்க வைத்துள்ளதாக மீடியாக்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். இருப்பினும் அடுத்த வாரம் வீட்டுக்கு செல்வோம் என நம்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் ஆபத்தான விஷயம் என்பதால் திரும்பிச் சென்றுவிடும்படி போலீசார், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் எங்களிடம் கூறினர். அப்போது எங்களுக்கு எந்த பயமும் இல்லை. கோயிலுக்கு செல்வதே நோக்கமாக இருந்தது. நாங்கள் சென்றதால் பல போராட்டங்கள் நடந்ததை அறிவோம். கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டியது பா.ஜ., அரசின் கடமை. நாங்கள் போலீசாரையும், கேரள அரசையும், எங்களின் கேரள ஜனநாயக சமுதாய அமைப்பையும் நம்புகிறோம். அவர்கள் அடுத்த வாரம் எங்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள் என நம்புகிறோம் என்றனர்.

-dinamalar.com

TAGS: