அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : நீதிபதி தலைமையில் குழு அமைப்பு

மதுரை : மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையிலான குழுவை, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையை நியமித்துள்ளது. வக்கீல்கள், சரவணன், ஆனந்த், சந்திரசேகர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஆலோசனைக்குழு அமைப்பு :

மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த 16 பேர் கொண்ட ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு மேடையை, ஆலோசனை குழு ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும், போட்டியில், எந்த சமூகத்தினருக்கோ மற்றும் காளைகளுக்கோ முதல் மரியாதை அளிக்கக்கூடாது . போட்டி நடக்கும் இடத்தில் கட்சி, சமூகம், தொடர்பான கொடி, தலைவர்கள், பிளக்ஸ்போர்டு உள்ளிட்டவற்றை வைக்கக்கூடாது, இந்த நீதிபதி தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுவே, பரிசுப்பொருட்களையும், தொகையும் வசூலிக்கும் உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

-dinamalar.com

TAGS: