வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை : சிக்கிமில் துவக்கம்

காங்டாக் : சிக்கிமில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங் தொடங்கி வைத்தார்.

காங்டாக்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதல் கட்டமாக 12,000 பேருக்கு வேலைக்கான உத்தரவை அவர் வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.. கடந்த ஆண்டின் சட்டசபை குளிர்காலக் கூட்டத் தொடரில் இத்திட்டத்தை அறிவித்த சிக்கிம் அரசு இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது.இதன்படி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அவர் தகுதிக்கேற்றபடி அரசுப் பணி வழங்கப்படும்.

-dinamalar.com

TAGS: