பிஷப் மீதான வழக்கு : கன்னியாஸ்திரிகளுக்கு நோட்டீஸ்

கொச்சி : கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில், பிஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய 4 கன்னியாஸ்திரிகளுக்கு ஜீசஸ் சபை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கேரளாவில், கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த, கன்னியாஸ்திரியை ,பஞ்சாப் ,ஜலந்தரில் பிஷப்பாக பணியாற்றிய பிராங்கோ மூலக்கல் என்ற பாதிரியார், 13 முறைபாலியல் பலாத்காரம் செய்ததாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பிராங்கோ மூலக்கல், பிஷப் பொறுப்பில் இருந்து விலகினார்.

ஜலந்தரில் உள்ள மிஷனரிஸ் ஆப் ஜீசஸ் சபையைச்சேர்ந்த சில கன்னியாஸ்திரிகள், பாதிக்கப் பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக கேரளாவில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் போராட்டம் நடத்திய 4 கன்னியாஸ்திரிகளும் கோட்டயம் , குருவிலாங்கோடு ,கான்வென்ட் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஜலாந்தரில் உள்ள மிஷனிரிஸ் ஆப் ஜீசஸ் அமைப்பு நோட்டீஸ் அனுப்பி அவர்கள் நான்கு பேரும் கான்வென்டில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளனர்.

-dinamalar.com

TAGS: