கேரளாவின் அகஸ்தியகூடம் மலையில் ஏறிய முதல் பெண் தான்யா சனால்: சமூகத் தடையை உடைத்தார்

இதுவரை ஆண்கள் மட்டுமே ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்ட புனித மலை ஒன்றில் முதல்முறையாக பெண்ணொருவர் ஏறியுள்ளார்.

தென்னிந்திய மாநிலமான கேரளத்திலுள்ள அகஸ்தியகூடம் என்கிற மலையின் உச்சியில் தான்யா சனால் ஏறியிருப்பது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்புக்கு பின்னால் சாத்தியமாகியுள்ளது.

பிரம்மசாரியான இந்து முனிவரின் சிலை இருப்பதால், இந்த மலையில் பெண்கள் ஏறக்கூடாது என்று இங்குள்ள பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தான்யா சனால்

உள்ளூர்வாசிகளோ, போராட்டக்காரர்களோடு இந்த மலையில் ஏறும்போது தன்னை தடுக்கவில்லை என்று 38 வயதான சனால் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த மலையில் ஏறுவதில் இருந்த பாலின பாகுபாடு இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளதாக பரப்புரையாளர்கள் தெரிவிக்கின்றனர். -BBC_Tamil

TAGS: