தமிழகத்தில் ஆசிரியர்கள் 2 ஆவது நாளாக சாலை மறியலும் வேலை நிறுத்தமும்! : 30 000 பேர் கைது

தமிழகத்தில் சென்னை உட்பட பல முக்கிய நகரங்களில் ஜாக்டோ ஜியோ என்ற அமைப்பின் சார்பில் அரச ஊழியர்களும், ஆசிரியர்களும் சாலை மறியலிலும், வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தனர் என்ற காரணத்துக்காக சுமார் 30 000 பேர் வரை கைது செய்யப் பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பதற்றம் நிலவுகின்றது.

அரச ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 6 ஆவது ஊதியக் குழு ஊதியத்தில் 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன போன்ற 9 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தியே ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பாக அரச ஊழியர்களும், ஆசிரியர்களும் கால வரையறை அற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுதும் சுமார் 8 அஇலட்சம் பேர் பங்கேற்ற இப்போராட்டத்தால் அங்கு அரச அலுவலகங்கள் மற்றும் அரச பள்ளிகள் என்பன முடங்கியுள்ளன.

கைது செய்யப் பட்ட அனைவரும் பின்னர் மாலையில் விடுவிக்கப் பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

-4tamilmedia.com

TAGS: