உலக அளவில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் கடந்த வருடம் 81 ஆவது இடத்தில் இருந்த இந்தியா இந்த வருடம் 78 ஆவது இடத்துக்கு வந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் இப்பட்டியலைத் தயாரிக்கும் டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் என்ற அமைப்பு உலகம் முழுதும் இருந்து ஊழல் அதிகமுள்ள 180 நாடுகளின் பட்டியலை இவ்வருடமும் வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் முதல் 20 இடங்களில் இருந்து அமெரிக்கா வெளியேறியும் சீனா கடந்த ஆண்டு 77 ஆவது இடத்தில் இருந்து 87 ஆவது இடத்துக்கும் சென்றுள்ளன. ஊழல் மிகுந்த ஆசிய நாடுகளில் இந்தியா 41 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 33 ஆவது இடத்திலும் மாலத்தீவு 31 ஆவது இடத்திலும் மலேசியா 47 ஆவது இடத்திலும் உள்ளன. ஊழல் மிகக் குறைந்த நாடுகளாக டென்மார்க் மற்றும் நியூசிலாந்தும், ஊழல் மிக அதிகமான நாடுகளாக சிரியா, சூடான் ஆகியவையும் உள்ளன.
-4tamilmedia.com