போலிச் செய்திகளுக்கு எதிராக ஃபேஸ்புக்

போலிச் செய்திகளை எதிர்கொள்வதற்காக இந்தியாவில் உண்மை பரிசோதிக்கும் குழுவை விரிவாக்க போவதாக கூறி உள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

இந்தியாவில் அரசியல் சார்ந்த விளம்பரங்களுக்கு கடுமையான விதிகளை அண்மையில் அறிவித்தது ஃபேஸ்புக் நிறுவனம். இதனை அடுத்து இவ்வாறான அறிவிப்பு வந்துள்ளது.

இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டி கடினமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் செயலியை 200 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள். அதில் பரவிய போலிச் செய்திகளால் கும்பல் கொலைகள் நடந்தன. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. -BBC_Tamil

TAGS: