வரும் ஏப்பிரல் மாதம் இந்திய நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற உள்ள நிலையில். மோடியின் ஆதரவு குன்றி அவரது கட்சியும் செல்வாக்கை இழந்த நிலை காணப்பட்டது. பல மாநில தலைவர்கள் மோடிக்கு எதிராக போர் கொடி பிடித்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தற்போது மோடியைப் பார்த்து கெஞ்சுகிறார்கள். பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்குமாறு… நிலமை எப்படி தலை கீழாக மாறியுள்ளது தெரிகிறதா ?
கடந்த 14ம் தேதி புல்வமா தற்கொலை தாக்குதலில் இந்திய படையினர் 44 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நாடே கொந்தளித்த நிலையில், நிலமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ள மோடி. இன்றைய தினம் இத்தாக்குதலுக்கு வித்திட்ட நபரை தாம் சுட்டுக் கொன்றதாக அறிவித்து மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை பலப்படுத்தியுள்ளார். இது போல பல மாநில தலைவர்கள், மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இவை அனைத்தையும் வைத்தும் பார்க்கும் போது, 44 ராணுவத்தை பலிகடாவாக்கி தனது தேர்தல் செல்வாக்கை உயர்த்தியுள்ளார் மோடி. மக்களும் அவர் செய்த வேலைகளை மறந்து, தற்போது மோடியை பற்றி வியந்து வருகிறார்கள். ஒட்டு மொத்ததில் இந்திய இறையாண்மை மீதே விளையாடி நாடகமாடியுள்ளார் மோடி.. இவர் ஒரு பெரும் கேடி என்று பலர் கூறுவது சரிதான்…
-athirvu.in