இந்தியா-பாகிஸ்தான் மோதல்: காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் தேசங்கள்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சமீபத்தில் அதிகரித்துள்ள மோதல்கள் பற்றி குறிப்பிடும்போது, “நாம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறோம்” என்று ஹூசைன் ஹக்கானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதரும், மூன்று பாகிஸ்தான் பிரதமர்களுக்கு ஆலோசகராக செயல்பட்டவருமான அவர், சமீபத்தில் வெளியாகியுள்ள “ரிஇமேஜனிங் பாகிஸ்தான்: டிரான்ஸ்ஃபார்மிங் டிஸ்பங்சனல் நியூகிளியர் ஸ்டேட்” (Reimagining Pakistan: Transforming a Dysfunctional Nuclear State) என்கிற புத்தகத்தை எழுதியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, இந்தியா தாக்குதல் நடத்திய பின்னர், இந்தியாவுக்கு பதிலடி தருவதற்கு நேரமும், இடமும் முடிவு செய்யப்படும் என பாகிஸ்தான் பதிலளித்தது.

இவ்வாறு தெரிவித்த 24 மணிநேரத்திற்குள், பாகிஸ்தான் மற்றும் இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீரை பிரிக்கின்ற கட்டுப்பாட்டு எல்லை கோட்டை தாண்டி வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர் வான்பரப்பில் வைத்து இந்திய விமானப்படையின் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், இரண்டு விமானிகளை கைது செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வடக்கு பகுதியிலுள்ள வான்பரப்பை இந்தியா சிறிது நேரத்துக்கு மூடியது.

போர் விமானங்கள்

முற்றிலும் கட்டுப்பாடின்றி செல்வதற்கு முன்னால், மோதல்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதே இப்போது இருக்கும் பெரும் சவாலாகும்.

செவ்வாய்க்கிழமை இந்தியாவால் நடத்தப்பட்ட தாக்குதல் முற்றிலும் எதிர்பாராத ஒன்று. 1971ம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற போருக்கு பின்னர், காஷ்மீரை பிரிக்கின்ற எல்லை கோட்டை தாண்டி சென்று முதல்முறையாக இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.

“பயங்கரவாதம் என்ற போர்முறையை பயன்படுத்துவதன் மூலம், மோதலை அதிகரிப்பதை விரும்பாத இந்தியாவின் போக்கை, அணு ஆயுத நாடு என்ற பதாகையின்கீழ் பாகிஸ்தான் சாதகமாக்கிக்கொண்டது” என்று பேராசிரியர் ஹக்கானி என்னிடம் கூறினார்.

“2016ம் ஆண்டு நடத்தியதைப் போல சிறப்பு படைகளை கொண்டு தாக்கவோ, தற்போது நடத்தியதைப் போல விமானத்தாக்குதல் நடத்தவோ, அதே நேரத்தில் ஒரு அளவைத் தாண்டாமல், உள்ள வாய்ப்பை இந்தியா இனம் கண்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை
இலங்கை

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோகின்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த பேராசிரியர் டேனியேல் மார்கி இது பற்றி கருத்து தெரிவிக்கையில், “பாகிஸ்தானின் பிரச்சனைக்கான பெரும்பாலான ராணுவ தீர்வுகள் இந்தியாவிடமே உள்ளன. மேலும், அவை பாகிஸ்தானுக்கு ஏற்படுத்தும் பாதிப்புக்களைவிட இந்தியாவுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக உள்ளன” என்று கூறியுள்ளார்.

“இந்தியாவிலுள்ள அனைவருக்கும் இது தெரியும். பாகிஸ்தானின் அத்துமீறல் ஒவ்வொன்றுக்கும் உயர் நிலை தண்டனை வழங்குவதை நடைமுறைப்படுத்துவதே இப்போதைய இலக்காகும். ஒவ்வொரு நடவடிக்கையும், கவனமாக திட்டமிடப்பட்டு, அதிக தவறுகள் இல்லாமல் நிறைவேற்றப்படும் வரை இதுவொரு மோசமான போர் வியூகமல்ல” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் உடைந்த பாகம் என பாகிஸ்தான் கூறுகின்ற விமானப் பகுதி
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் உடைந்த பாகம் என பாகிஸ்தான் கூறுகின்ற விமானப் பகுதி

உதாரணமாக, இந்த சம்பத்தை பொறுத்த மட்டில், இந்தியாவின் கட்டுப்பாட்டு எல்லை கோட்டிலிருந்து தாக்குதல் நடத்த இந்திய போர் விமானங்கள் திட்டமிட்டிருந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், காற்று பாகிஸ்தானின் எல்லைக்குள் அவற்றை கொண்டு சென்றுள்ளன.

இலங்கை
இலங்கை

இது உண்மையாக இருந்தால், மோதல் அதிகரிப்பில் திட்டமிடப்படாத கூறு இது என்பதால், ஒவ்வொரு நடவடிக்கையிலும் புதிய ஆபத்தை ஏற்படுத்தலாம்” என்கிறார் அவர்.

அணு ஆயுத மோதலால் என்ன ஆபத்து?

முன்னால் எண்ணியதைவிட இந்த மோதல் அதிகரிப்பு மிகவும் மோசமானது என்று டேனியல் மார்க்கி கூறுகிறார்.

“பாகிஸ்தான் மண்ணில் நேரடியாக மோதலை கொண்டு சென்றிருப்பது, ஆயுத பலத்தையும், சமீபத்திய இந்திய பிரதமர்கள் எடுப்பதற்கு தயங்கும் வித்தியாசமான நடவடிக்கையையும் காட்டுகிறது” என்கிறார் அவர்.

எனவே, அணு ஆயுத மோதல் ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளதா?

“இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அணு ஆயுத மோதல் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் உண்மையாகவே இருப்பது கவலைக்குரியதாகும். ஆனால், அந்த ஆபத்து அருகாமையில் இல்லை. எதிர்பாராத விதமாக அல்லது அதிகாரபூர்வமில்லாத வகையில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் (இரண்டுக்கும் வாய்ப்பே இல்லை) ஆபத்து குறித்தும், பாரம்பரிய போர் முறையிலான முறையில் மோதல் அதிகரிப்பு குறித்தும் நோக்கவேண்டும் என்று டாக்டர் மார்க்கி தெரிவிக்கிறார்.

பாகிஸ்தானின் அடுத்த நடவடிக்கை பொது மக்களைத் தாக்குவதாக இருக்குமானால், அது அணு ஆயுத மோதல் அபாயத்தை நோக்கியும் இட்டுச்செல்லலாம்.

இது நடைபெற வாய்ப்பில்லை. ஆனால், பல தசாப்தங்களாக மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து வருவதில் இருந்து திரும்பிச் செல்லும் வழியை இவ்விரு நாடுகளால் கண்டுபிடிக்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறியாகும். -BBC_Tamil

TAGS: