காஷ்மீர் எல்லை: சாமான்ய மக்களின் வாழ்வு அங்கு எப்படி உள்ளது? – நேரடியாக களத்திலிருந்து

இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் வாழும் மக்களால் ஏற்கெனவே அனுபவிக்கப்பட்டு வந்த பிரச்சனைகள் மேலும் அதிகரித்துள்ளன.

அந்த மக்களின் வீடுகளும், முகாம்களும் எப்போதும் குண்டுகளால் இலக்கு வைக்கப்படுபவை என்பதால், ஸ்திரமில்லாத நிலையில் தங்களின் வாழ்க்கையை ஆண்டு முழுவதும் இந்த மக்கள் நடத்தி வருகிறார்கள். இந்த பதற்றத்தில் இவர்கள் வீடில்லாதவர்களாகவும் உருவாக வேண்டியுள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் இந்தியா நுழைந்து நடத்திய தாக்குதலுக்கு பின்னர், மென்ரக மற்றும் கனரக ஆயுதங்களோடு எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் பிற பகுதிகளோடு சாகோதி செக்டரும் துப்பாக்கி சத்தங்களால் நிறைந்திருந்தது.

மீண்டும் வீடிழப்பு

அதிகாலை 2.15 மணிக்கு வெடிப்பு சத்தங்களை கேட்டு தூக்கம் எழுந்ததாக பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீரிலுள்ள வாடி-இ-சிஹலாமின் சாகோதி கிராமத்தில் வாழும் சையத் ஹூசைன் தெரிவிக்கிறார்.

1999ம் ஆண்டு ஏற்பட்ட பதற்றத்தின்போது அவரது குடும்பம் முன்னதாக சொந்த வீட்டை இழந்திருந்தது. இந்தியா நேரடியாக குண்டு தாக்குதல் நடத்திய அதே இடத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகுதான் அவர்களால் ஒரு வீட்டை கட்டமுடிந்தது.

அதிகாலை 2 முதல் 4 மணிவரை எனது குடும்பத்தினர் பீதியிலும், அமைதியின்றியும் கழித்தனர்.

தெரு

மலையில் வாழ்வதால், இருளில் சாலை வழியாக கீழே செல்ல முடியாது என்று அவர் தெரிவித்தார்.

“சிறிய குழந்தைகளோடு கரடுமுரடான வழிகளில் இருளில் மலையை விட்டு கீழே இறங்குவது மிகவும் ஆபத்தானது. டார்ச் விளக்கை பயன்படுத்துவதும் ஆபத்தானது. எனவே விடிவதற்காக காத்திருந்தோம்” என்று ஹூசைன் தெரிவித்தார்.

“துப்பாக்கி சண்டை நடைபெறும்போது குடிமக்கள் என்றோ, படைவீர்ர்கள் என்றோ இந்திய படைக்கு தெரியாது. அவர்கள் கொல்ல வேண்டும். அவ்வளவுதான்” என்று அவர் மேலும் கூறினார்.

எல்லை பகுதி

தனது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரோடு சையத் ஹூசைன் சாலையை வந்தடைந்தபோது, துப்பாக்கி சண்டை தொடங்கிவிட்டதை அறிய வந்தார்.

சாலைக்கு அருகில் வாழ்தோர் அனைவரும் வாகனங்களிலும், நடந்தும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

“கொள்கலனுடைய வாகனத்தில் எங்களது உறவினரில் ஒருவர் வரவே, அதில் நாங்கள் அனைவரும் ஏறி அவ்விடத்தை விட்டு சென்று விட்டோம்” என்று நிம்மதியோடு ஹூசைன் கூறினார்.

இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் வான்பரப்பில் நுழைந்த பின்னர், நிர்வாகமும், படையும் மாலை வேளையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென உள்ளூர் மக்களிடம் கூறியதாக சையத் கிஃபாயாட் ஷா என்கிற இன்னொருவர் கூறினார்.

சாலை

“ஆனால், பதற்றங்களுக்கு பிறகு எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதுண்டு. எதுவும் நடைபெறாது என்று உள்ளூர் மக்கள் இருந்துவிட்டனர். இரவு துப்பாக்கிச் சண்டை தொடங்கிய பின், எங்கள் குழந்தைகளை கூட்டிக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினோம்” என்று சையத் கிஃபாயாட் ஷா கூறினார்.

“கிராமம் முழுவதும் வெறிச்சோடி இருந்தாலும், மாலை வேளையில் எங்கள் கால்நடைகளுக்கு உணவூட்ட வேண்டும் என்பதால் நாங்கள் வீடுகளுக்கு திரும்பினோம்” என்கிறார் சையத் கிஃபாயாட் ஷா.

வீடுகளுக்கு அருகில் பாதுகாப்பு குழிகளை உருவாக்கி கொள்ளுவதற்கு உள்ளூர் மக்களுக்கு முன்னாள் நிர்வாகம் நிதியுதவி வழங்கியதாக அவர் கூறினார். ஆனால், இந்த நிதியுதவி போதிய அளவில் இல்லை அல்லது பல மக்களுக்கு கிடைக்கவில்லை” என்றும் கிஃபாயாட் ஷா தெரிவித்தார்.

“பாதுகாப்பான இடங்கள் இருந்திருந்தால், நடுஇரவில் நாங்கள் எங்கள் வீடுகளை விட்டு சென்றிருக்க மாட்டோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

“நிர்வாகம் தயாராகவும், எச்சரிக்கையோடு உள்ளது”

பாதுகாவல்

ஹாதியன் பாலா நகரின் கீழ் இருக்கும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைந்துள்ள சாகோதி மற்றும் அதன் அருகிலுள்ள இடங்கள் வருகின்றன.

ஹாதியன் பாலாவின் காவல்துறை துணை ஆணையர் இம்ரான் ஷாஹீன் பிபிசியிடம் பேசுகையில், எல்லை கோட்டு பகுதியில் இருக்கும் சாகோதி மற்றும் குலானாவில் இருந்து சுமார் 100 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, இன்னும் பலர் அவர்களது உறவினர் வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். நிர்வாகமும் மக்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த பகுதி காஷ்மீரின் முக்கிய அமைச்சருக்கு சொந்தமானதால், அவரது ஆணையால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்வி நிறுவன கட்டடங்கள் மக்கள் தங்குகின்ற இடங்களாக மாற்றப்பட்டுள்ளதோடு, மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

காஷ்மீர்

புதன்கிழமை நண்பகலுக்கு பிறகு துப்பாக்கி சண்டை நடைபெறவில்லை. இருந்தபோதும் நிர்வாகம் எச்சரிக்கையோடு இருந்தது. அரசு சாரா எல்லா நிறுவனங்களும் அரசோடு ஒத்துழைத்தார்கள் என்று கிஃபாயாட் ஷா தெரிவித்தார்.

மக்கள் அவர்களின் பாதுகாப்புக்காக எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இத்தருணத்தில் அமைதி நிலவும் நீலாம், பீதியில் மக்கள்

மறுபுறம் வாடி-இ-நீலாம் ஓரளவு அமைதியாக உள்ளது. ஆனால் இந்த அமைதியில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை.

துப்பாக்கி சுடும் வீரர்

நீலாமில், ஆற்றின் மறுபக்கத்தில் உள்ள ஜனாப்பிற்கு செல்லும் பெரியதொரு சாலை பகுதி இந்தியாவின் குண்டுகளுக்கு இலக்காகவே இருந்து வருகிறது. எனவே, பதற்ற வேளையில் உள்ளூர் மக்கள் இடம்பெயர்வது எளிதல்ல.

பல வேளைகளில் உள்ளூர் மக்களும், வாகனங்களும் இங்கு வைத்து சுடப்பட்டுள்ளதும் நினைவுகூரத்தக்கது.

மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட பின்னரும், இங்கு இதுவரை எந்த குண்டு தாக்குதலும் நடைபெறவில்லை என்று நீலாமை சேர்ந்த அபிட் ஹூசைன் தெரிவிக்கிறார்.

இரண்டு முதல் மூன்று மணிநேரத்திற்கு ஒரு வாகனம் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டாலும், நாசோரிக்கு அருகிலுள்ள முசாஃபாபாத் சாலை வாகன நெரிசலால் மூடப்பட்டுள்ளது.

இத்தகைய நிலைமையால், இந்த இடம் பிற இடங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. முந்தைய அனுபவங்கள் மற்றும் வானிலை காரணங்களால் குறைந்தது ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை மக்கள் வாங்கி வைத்து கொள்கின்றனர் என்கிறார் அபிட்.

இந்த பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு நாட்களாக மாலையில் மின்சாரம் வழங்கப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.

பதற்ற வேளையில், நீலாம் பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவது சாத்தியமில்லை. சாலை இலக்கு வைக்கப்படுகிறது. மலை உச்சிகள் பனியால் மூடியுள்ளதால் மலைகளை கடந்து செல்வதும் சாத்தியமில்லை என்று அபிட் தெரிவித்திருக்கிறார். -BBC_Tamil

TAGS: