டில்லிக்கு மாநில அந்தஸ்து:நாளை தர்ணா

புதுடில்லி: டில்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக்கோரி, மார்ச், 1 முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக, முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.

பாக்., பயங்கரவாத முகாம் மீது, இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தி . பயங்கரவாத அமைப்பின் முகாமை அழித்த, இந்திய விமானப் படை விமானிகளின் வீரத்துக்கு, ‘சல்யூட்’ தெரிவித்ததுடன் தாம் நடத்தவிருந்த, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.இந்நிலையில் வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் டில்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கிட வலியுறுத்தி பா.ஜ. மற்றும் காங். கட்சி அலுவலகங்களை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.

-dinamalar.com
TAGS: