காஷ்மீர் தாய்மார்களுக்கு ராணுவம் வேண்டுகோள்

புதுடில்லி : காஷ்மீரில் உள்ள தாய்மார்கள் தங்களின் பிள்ளைகள் பயங்கரவாத வழியில் செல்லாமல் தடுக்கும்படி ராணுவ லெப்டினட் ஜெனரல் கே.ஜெ.எஸ்.தில்லான் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீரில் வாழும் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் பயங்கரவாதத்தில் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தெரியாமல் யாராவது அந்த பாதையை தேர்ந்தெடுத்து விட்டு, தற்போது அதிலிருந்து மீண்டு வர விரும்பினால், அவர்கள் திரும்புவதற்கும், அவர்களுக்கு நல்ல பாதை அமைத்து தரவும் ராணுவம் தயாராக உள்ளது. உங்களின் பாதுகாப்பை ராணுவம் உறுதி செய்யும் .

மேலும் அவர் கூறுகையில்; அனைத்து காஷ்மீர் தாய்மார்களும் தங்கள் மகன்களிடம் சரணடைய சொல்லுங்கள். பயங்கரவாத பாதையில் இருந்து திரும்பி வர சொல்லுங்கள். துப்பாக்கி எடுத்தவன் அதன் மூலமே கொல்லப்படுவான். அதற்கு சரணடைவது மேல் . கடந்த சில நாட்களாக காஷ்மீர் இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் 152 இளைஞர்கள் ராணுவத்தில் சேர தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

-dinamalar.com
TAGS: