இந்த தேர்தலில் நானும் போட்டி

சென்னை: வரவிருக்கும் தேர்தலில் நானும் போட்டியிடவுள்ளேன். எங்கே என்பதை நான் பத்திரிகையாளர்களிடம் விரைவில் சொல்கிறேன் என மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல் கூறினார்.

இன்று அவர் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள டார்ச் சின்னம் பொருத்தமானதாகும். நாங்கள் மக்களுடன் கூட்டணியில் உள்ளோம். இது பலமான கூட்டணி ஆகும்.

தமிழகத்தில் நோட்டாவில் கண்ணுக்கு தெரியாமல் உள்ள பா.ஜ.,வை தேடி கண்டுபிடிக்க எங்களின் சின்னமான டார்ச் உதவும். மக்களுக்கான தேர்தல் அறிக்கை தயாராகி கொண்டிருக்கிறது. 21 சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும்.வரும் 11, 12, 13 , 14, 15 தேதிகளில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடக்கும். பூரண மதுவிலக்கு என்பதில் படிப்படியாக நடக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பும் வேண்டும். கெட்டப்பழக்கம் என மக்கள் உணர வேண்டும்.

ரஜினி ஆதரவை கேட்பீர்களா என்ற நிருபர்கள் கேள்விக்கு நான் யாரிடமும் கேட்க மாட்டேன் அவர்களாக தர வேண்டும் அது தான் நல்லது என்றார்.

கேள்வி

வரும் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா ?

பதில்;

நானும் இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ளேன். எந்த தொகுதி என்பதை நான் விரைவில் சொல்லுகிறேன். இவ்வாறு கமல் கூறினார்.

-dinamalar.com

TAGS: