ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் விடிய விடிய நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி உள்பட மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புல்வாமாவில் கடந்த மாதம் 14 -ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு, இந்திய -பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை நமது ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அந்த இடத்தை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தீவிரவாதிகளும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கு இடையே விடிய, விடிய நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில், ஜெய்ஷ் -இ- முகம்மது அமைப்பைச் சேர்ந்த 23 வயதான முத்சார் அகமது கானும் ஒருவன் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவன் தான், புல்வாமா தாக்குதல் நடைபெற்ற நாளில் அதற்கான வாகனத்தையும், வெடிபொருள்களையும் தற்கொலை படைக்கு ஏற்பாடு செய்து தந்தவன் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
-eelamnews.co.uk