நாம் தமிழர் கட்சிதான் வரணும்.. சீமானுக்கு மொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து ஆதரவு

சென்னை: லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது.

லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி துவங்குகிறது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதனுடன் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

இந்த இரண்டு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிட உள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி இதுவரை யாரிடமும் கூட்டணி வைக்கவில்லை என்பதால் பெரும்பாலும் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது.

இந்த நிலையில்தான் நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. தமிழர் தேசிய ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அ.வினோத், மருது மக்கள் இயக்கத் தலைவர் செ.முத்துப்பாண்டியன் விடுதலைக் கழகத் தலைவர் ஆ.கி.ஜோசப் கென்னடி, தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், ஆகியோர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

நாம் தமிழர் கட்சிக்கு தமிழர் தேசிய விடுதலைக் கழகம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், தமிழர் நலப் பேரியக்கம், மருது மக்கள் இயக்கம், இஸ்லாமிய மக்கள் இயக்கம், புரட்சிகர கம்யூனிஸ்ட், இந்திய சுதந்திரா கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் கழகம், தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் பேரவை, இசுலாமிய சேவை சங்கம், தமிழக இளைஞர் முன்னணி, தமிழக மீனவர் முன்னணி, தமிழக இளையோர் எழுச்சிப் பாசறை, தமிழ் மீனவர் கழகம், கிருத்துவ மக்கள் மன்றம், வீரத்தமிழர் விடுதலைப் பேரவை, விடிவெள்ளி மக்கள் இயக்கம் ஆகியவை ஆதரவு அளிப்பதாக முடிவெடுத்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: