பாக்., அத்துமீறல்: ராணுவ வீரர் வீரமரணம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

3 போலீசார் காயம்

பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர், போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 3 போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

-dinamalar.com

TAGS: