திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி சார்பாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். அதை ஒட்டி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டர் வினயிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளரும், நடிகருமான மன்சூர் அலிகான்…
தேர்தல் ஆணையத்தில் காளமாடும், மயிலும் சின்னமாக வழங்க வேண்டும் என்று கேட்டோம் ஆனால் அவர்கள் அதைத் தராமல் விவசாய சின்னத்தை கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே மத்திய அரசு விவசாயத்தை அழித்து விட்டது. நாங்கதான் இனி விவசாயத்திற்கு வாழ்வு கொடுக்க இருக்கிறோம். மத்தியிலும், மாநிலத்திலும் எங்கள் ஆட்சி வரும் அதன் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள். அதுபோல் மத்தில் பிரதமராக தமிழன் தான் வரவேண்டும்.
திண்டுக்கல் தொகுதியில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அதை இந்த அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. 7 கோடி தமிழர்களின் பிரதிநிதியாக இருக்கக்கூடிய முகிலனை கண்டுபிடித்து தரவேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம். நான் இந்தத் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக போகவேண்டும் என்று மக்களிடம் ஓட்டு கேட்கவில்லை மக்களின் வேலைக்காரனாக பாராளுமன்றத்திற்கு போக வேண்டும் என்று தான் ஓட்டு கேட்டு வருகிறேன் என்று கூறினார்.
-nakkheeran.in
மன்சூர் அலிகான் ஒரு
“கேலி கூத்தாடி” !!!
இன்னும் எத்தனை காலத்திற்கு கூத்தாடி மற்றும் கூத்தாடி தொழில் சார்ந்தவர்களுக்கு கூஜா தூக்கும் “ஈனபய மக்களாக” இருக்க போகிறீர்கள் ???
இத்தேர்தலில் மட்டுமல்ல இனிவரும் அனைத்து தேர்தல்களிளும் கூத்தாடி
மற்றும் கூத்தாடி தொழில் சார்ந்தவர்களையும் புறக்கணிப்போம் !!!
புறக்கணிப்போம் !!!
புறக்கணிப்போம் !!!