புல்வாமா தாக்குதலில் தீவிரவாதிகள் பயன்படுத்தியது அமெரிக்க சிம்கார்டு?

பெப்ரவரி 14 ஆம் திகதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்தியத் துணை இராணுவத்தினரின் வாகனப் பேரணி மீது மிக மோசமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய ஜெய்ஸ் இ முகது என்ற தீவிரவாதக் குழு இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தியது அமெரிக்காவின் விர்ச்சுவல் சிம் கார்டு என இந்திய மத்திய புலனாய்வுத் துறை கண்டு பிடித்துள்ளது.

இந்த புல்வாமா தாக்குதலுடன் நேரடித் தொடர்புடைய அகில்தார், முதார்சிகான் என்ற இரு தீவிரவாதிகளுமே இந்த அதிதிறன் விர்ச்சுவல் சிம் கார்டைப் பயன்படுத்தி அதன் மூலம் பாகிஸ்தானில் இருந்த தமது தலைவர்களுடன் பேசியுள்ளனர். மேலும் இவர்கள் வைத்திருந்த மாபைலில் அனைத்து சமூக வலைத் தளங்களையும் பயன்படுத்தும் வசதியும் இருந்துள்ளது.

இத்தீவிரவாதிகளுக்கு எவ்வாறு இந்த அமெரிக்க சிம் கார்டு கிடைத்தது என்ற கோணத்தில் தற்போது விசாரணையை நடத்த அமெரிக்காவின் உதவியையும் நாடியுள்ளனர் இந்திய மத்தியப் புலனாய்வுப் பிரிவினர். இதேவேளை 2008 மும்பைத் தீவிரவாத தாக்குதலிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சிம்கார்டுகளை வாங்கிப் பயன்படுத்தி இருந்தது புலன் விசாரணையில் தெரிய வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-4tamilmedia.com

TAGS: