25 தொழிலதிபர்கள் ரூ.90 ஆயிரம் கோடியை மோசடி செய்து ஓட்டம்… வைகோ காட்டம்

ஈரோடு: கடந்த ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியில் 25 பேர் 90 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மோடி அரசில் விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட 25 பேர் ரூ 90 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு ஓடிவிட்டனர்.

மாண்புமிகு நரேந்திர மோடியின் அரசு கார்ப்பரேட் கம்பெனிகளின் அரசு என்பதால் தான், அவர்கள் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் கோடிக்கு வரி சலுகை பெற்று இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார் .

மேலும், பூமிக்கடியில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் எரிவாயு திட்டத்தில் பல கோடி ரூபாய் கார்ப்பரேட் கம்பெனிகள் லாபம் பெறும்.

ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் காவல்துறையை கூலிப்படையாக மாற்றி 13 பேரை சுட்டு தள்ளியது தமிழக அரசு என்றும் குற்றம்சாட்டினார்.

மேகதாதுவில் அணை கட்டிக்கொள்ளுங்கள் என பா.ஜ.க. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ரூ. 5900 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார் என்றும் கூறினார்.

tamil.oneindia.com

TAGS: