வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கணவன் மற்றும் மாமியார் 1½ மாதம் பட்டினி போட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் கேரள மாநிலம் கொல்லத்தில் இடம்பெற்றுள்ளது,
சம்பவம் தொடர்பில் மேலும்,
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியை சேர்ந்த துளசிதாஸ், விஜயலட்சுமி ஆகியோரின் மகள் துசரா (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்துலால் (30) என்பவருக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பெண்ணின் தந்தை திருமணத்தின்போது பேசப்பட்ட வரதட்சணையை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் மற்றும் மாமியார் இருவரும் சேர்ந்து புதுப்பெண்ணை அடித்து துன்புறுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 1½ மாதமாக புதுப்பெண் துசராவின் நடமாட்டம் இல்லை. துசரா வீட்டில் உள்ள தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். சத்தம்போடாமல் இருக்க வாயில் துணி கட்டப்பட்டிருந்தது.
காலையில் ஒரு டம்ளர் சர்பத், மதியம் ஒரு டம்ளர் தண்ணீர், இரவு மீண்டும் ஒரு டம்ளர் சர்பத் மட்டுமே ஜன்னல் வழியாக கொடுத்தனர்.
இந்நிலையில் நேற்று துசரா உடல் நிலை திடீரென மோசமானது. இதற்குமேல் வைத்திருந்தால் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த கணவரும், மாமியாரும் சேர்ந்து துசராவை கருநாகப்பள்ளியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துசரா பரிதாபமாக இறந்தார்.
துசராவின் சாவில் சந்தேகம் இருப்பதாக டாக்டர்கள் யூபுள்ளி பொலிசில் புகார் செய்தனர். பொலிசார் சந்துலால் மற்றும் அவரது தாய் கீதாலால் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் போதிய வரதட்சணை கிடைக்காத ஆத்திரத்தில் துசராவை வீட்டில் அடைத்து வைத்து பட்டினி போட்டோம். திருமணத்தின்போது 60 கிலோ எடை இருந்தார். 1 ½ மாதம் தண்ணீர் மட்டுமே கொடுத்ததால் 40 கிலோ எடை குறைந்து இறக்கும்போது 20 கிலோ எடை மட்டுமே இருந்தார். பட்டினி போட்டே கொலை செய்தோம் என்று தாயும், மகனும் ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த பொலிசார் கருநாகப்பள்ளி நீதிமன்றில் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-eelamnews.co.uk

























