பெரிய அசம்பாவிதம் இன்றி முடிந்தது முதல்கட்ட லோக்சபா தேர்தல்.. வாக்குப்பதிவு மந்தம்!

டெல்லி: நாடு முழுக்க மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று லோக்சபா தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு இந்த லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு 6 மணிக்கு நிறைவு பெற்றது.

பிரதமர் மோடியின் ஐந்து வருட பாஜக ஆட்சி முடிவிற்கு வந்ததை அடுத்து, தற்போது லோக்சபா தேர்தல் தொடங்கி உள்ளது. 17வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. இன்று மொத்தம் 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடந்தது.

மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. மே 19ம் தேதி வரை இந்த தேர்தல் திருவிழா நடக்க உள்ளது. அதன்பின் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஒரே கட்டம்

பல மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஆந்திர பிரதேசம், அருணாசலப்பிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், அந்தமான் மற்றும் நிக்கோபார், லட்சத்தீவு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

பல கட்டம்

அதேபோல் அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்திலும் சில தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இங்கு இன்று முதற்கட்ட தேர்தல் மட்டும் நடந்தது. ஆந்திரா, சிக்கிம், அருணாசலப்பிரதேசம், ஒடிசா (சில தொகுதிகள்) ஆகிய சட்டசபைக்கும் இன்றுதான் தேர்தல் நடைபெற்றது.

பலத்த பாதுகாப்பு

இந்த தேர்தல் நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுக்க மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று லோக்சபா தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு இந்த லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு 6 மணிக்கு நிறைவு பெற்றது.

எவ்வளவு சதவிகிதம்

லோக்சபா தேர்தல்:

உத்தர பிரதேசத்தில் 64% வாக்குப்பதிவு

நாகாலாந்தில் 68% வாக்குப்பதிவு

தெலுங்கானாவில் 60.9% வாக்குப்பதிவு

அசாமில் 65% வாக்குப்பதிவு

மேகாலயாவில் 66% வாக்குப்பதிவு நடந்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: