தஞ்சையில் பயங்கரம்.. மோடி படத்தை கழுத்தில் போட்டு வாக்கு கேட்ட முதியவர் கொலை

சென்னை: ஆட்சியாளர்களிடம் வீரத்தை காண்பிக்காமல் அப்பாவி முதியவர் ஒருவர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த போது அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (75). ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து வந்தார்.

இவருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவிந்தராஜ் தனியாக வசித்து வந்தார். இவர் பாஜகவில் இல்லாவிட்டாலும் மோடி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

வாக்கு

அதுபோல் எம்ஜிஆர் மீதும் ஈடுபாடு கொண்டவர் என்பதால் இவர் பாஜகவும் அதிமுகவும் ஒரே அணியில் இருக்கும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என கூறி வாக்கு சேகரித்தார்.

தாக்குதல்

அப்போது அங்கு வந்த கோபிநாத், அந்த முதியவரிடம் தகராறில் ஈடுபட்டார். மோடிக்கு ஆதரவாக ஏன் வாக்கு சேகரிக்கிறீர் என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆத்திரம் தாளாமல் முதியவர் என்றும் பாராமல் கடுமையாக தாக்கினார்.

சகிப்புத்தன்மை

இதில் அந்த முதியவர் உயிரிழந்தார். பார்ப்பதற்கு அய்யோ பாவம் போல் காட்சி அளிக்கும் முதியவரை இரவு நேரத்தில் அடித்துக் கொன்ற கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். இதை பார்க்கும் போது சகிப்புதன்மை என்பது யாருக்கும் இல்லாமல் போய்விட்டதையே இது காட்டுகிறது.

பிரசாரம்

மாட்டுக் கறி வைத்திருந்த முதியவர் அடித்துக் கொலை, பிள்ளை பிடிக்க வந்ததாக கருதி மூதாட்டி அடித்துக் கொலை என பல்வேறு சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டது. வாக்களிப்பது எப்படி ஜனநாயக கடமையோ அது போல் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்வதிலும தவறில்லை.

முதியவர் அடித்துக் கொலை

இன்று நாடு முழுக்க தேர்தல் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆட்சியாளர்களும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதை தேர்தல் ஆணையமே அனுமதிக்கிறது. அவ்வாறிருக்கையில் பிரச்சாரம் செய்த முதியவரை அடித்துக் கொன்றது எந்த வகையில் நியாயம்?

எந்த கட்சி

மோடிக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு முதியவர் பிரச்சாரம் செய்தது தவறு என்றால் அன்றாடம் வாக்கு கேட்டு வீதி வீதியாக வீடு வீடாக வரும் மோடி சார்ந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் செய்வது மட்டும் நியாயமா. ஆட்சியாளர்களிடம் வீரத்தை காட்டாமல் அப்பாவி பெரியவரிடம் வீரத்தை காட்டிய இந்த வீராதி வீரன் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: