‘ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்’ : ராஜபாளையத்தில் கடும் எதிர்ப்பு

ராஜபாளையம்: ‘ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும், எந்த கட்சியும், ஓட்டு கேட்டு வர வேண்டாம்’ என, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள், எச்சரிக்கை அட்டையை வீடுகளில் தொங்க விட்டுள்ளனர்.

ஹிந்து கடவுள்கள் மற்றும் வழக்கங்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்யும் தி.க., தலைவர் வீரமணி சமீபத்தில் ‘பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு முன்னோடி, கிருஷ்ணர் தான்’ என, கொச்சைப்படுத்தி பேசியதற்கு, கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ‘இது குறித்து, வீரமணியை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை எனில், தேர்தலில் தக்க பாடம் கற்பிப்போம்’ என, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜபாளையம், ஐ.என்.டி.யு.சி.,நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகளில், ‘ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் எந்த கட்சியும், ஓட்டு கேட்டு வர வேண்டாம்’ என, எச்சரிக்கை அறிவிப்பு தொங்க விடப்பட்டுள்ளது.

இந்த முறை தக்க பதில்

ஒவ்வொரு முறையும், ஹிந்து மதத்தின் மீது இவர்கள் வீசி செல்லும் அமிலம் போன்ற வார்த்தைகளை கேட்டு சகிக்க முடியாமல் இருந்தோம். இந்த முறை தக்க பதில் அளிப்போம்
ஆர்.பி.மகேஸ்வரன்,
பூஜாரி,
ராஜபாளையம்

பழிப்பதா?

இவர்களின் பகுத்தறிவு, ஹிந்து மதத்திற்கு எதிராக மட்டுமே தொடர்கிறது. ஓட்டுகளுக்காக கோடிக்கணக்கான மக்களின் மத நம்பிக்கையை பழிக்கின்றனர். எங்களிடம் ஓட்டு கேட்க வர வேண்டாம்.
ஆர்.பிரசன்னா,
குடும்பத் தலைவி

முடிவு கட்டுவோம்

வீரமணி பேசி வருவதற்கு வக்காலத்து வாங்கி வரும், தி.மு.க., தொடர்ந்து இதே வேலையை செய்து வருகிறது. இந்த இழி நிலைக்கு முடிவு கட்டுவோம்
பி.பிரேமா,
குடும்பத் தலைவி

-dinamalar.com

TAGS: