இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்.. பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையில், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் அடுத்தடுத்து இன்று நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில், சுமார் 200 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, நரேந்திர மோடி, ட்விட்டரில் கூறியுள்ளதாவது: இலங்கை குண்டு வெடிப்புக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற காட்டுமிராண்டித் தனத்திற்கு, நமது பிராந்தியத்தில் இடம் இல்லை. இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆறுதல்கள், காயமடைந்தோர் குடும்பங்களுக்கு எனது பிரார்த்தனைகள். இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்ட ட்வீட்டில், எங்கள் மக்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். இந்த மோசமான நேரத்தில், இலங்கை மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உறுதிப்படுத்தப்படாத செய்திகள், யூகங்களை புறம் தள்ளுங்கள். நிலைமையை சரி செய்ய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

tamil.oneindia.com

TAGS: