பிரதமர் நாற்காலி நீடித்தாலும் இல்லாவிட்டாலும் நானா, பயங்கரவாதிகளா? யார் உயிர் வாழ்வது என்று ஒருகை பார்ப்பேன் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி குஜராத் மாநிலம், பட்டான் நகரில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
’நான் இந்த மண்ணின் மைந்தன். இங்குள்ள 26 பாராளுமன்ற தொகுதிகளிலும் எங்களை வெற்றிபெற வைக்க வேண்டியது எனது மாநில மக்களின் கடமை. அப்படி செய்தால் மீண்டும் எனது ஆட்சி அமையும்.
ஆனால், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளும் பாஜகவுக்கு கிடைக்கவில்லை என்றால்இது ஏன் நடந்தது? என்று தொலைக்காட்சிகளில் மே மாதம் 23-ம் தேதி விவாதமேடை நடத்தப்படும்.
மோடி அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்று எனக்கு தெரியவில்லை என்று சரத்பவார் கூறுகிறார். அவருக்கே இது தெரியவில்லை என்றால் இம்ரான் கான் எங்கிருந்து தெரிந்துக்கொள்ளப் போகிறார்?
பிரதமர் நாற்காலி நீடித்தாலும் இல்லாவிட்டாலும் நானா, பயங்கரவாதிகளா? யார் உயிர் வாழ்வது என்று ஒருகை பார்க்கப் போகிறேன்’ என அவர் ஆவேசமாக குறிப்பிட்டார்.
-athirvu.in