இலங்கை குண்டுவெடிப்பு.. களமிறங்கும் நாம் தமிழர்.. சென்னையில் 26ம் தேதி சீமான் போராட்டம்!

சென்னை : இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலை கண்டித்து ஏப்ரல் 26ம் தேதி நாம் தமிழர் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது.

நேற்று முதல்நாள் இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பிற்கு எதிராக தற்போது நாம் தமிழர் கட்சி களமிறங்கி உள்ளது .

சீமான் அறிக்கை

இலங்கை குண்டு வெடிப்பு குறித்து நேற்று முதல்நாள் அறிக்கை வெளியிட்ட நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான், 2 லட்சம் தமிழர்கள் சிங்கள பேரின வாதத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி, நீதிகேட்டு இன்றும் நாம் போராடிக் கொண்டிருக்கிற வேளையில், இத்தாக்குதலானது பெரும் ஐயத்தை தோற்றுவிக்கிறது.

என்ன தாக்குதல்

இந்த தாக்குதல் பெரும் சந்தேகத்தை கிளப்புகிறது. இந்திய உளவு அமைப்பு இலங்கை அரசுக்கு 4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுத்துவிட்ட பிறகும் இலங்கை அரசு மெத்தனமாக இருந்ததன் மர்மம் என்ன? இது பல கேள்விகளை எழுப்புகிறது.

அதிகம் தமிழர்கள்

இலங்கையில் தேர்தல் நெருங்குகிற வேளையில், அதுவும் தமிழர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நடத்தப்பட்டிருக்கிற தாக்குதல் சிங்கள அரசு மீதே ஐயத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பிற்கு எதிராக தற்போது சீமான் தலைமையில் போராட்டம் நடக்க உள்ளது.

சென்னையில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலை கண்டித்து ஏப்ரல் 26ம் தேதி நாம் தமிழர் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது. 26 தேதி பிற்பகல் 3 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில் தமிழகத்தில் அதிகரித்து வரும் சாதி-மத வன்முறை வெறியாட்டங்களை கண்டித்தும் கோஷம் எழுப்ப இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: