பெரியகோயில் தமிழ் கல்வெட்டுகள் அகற்றி ஹிந்தி புகுத்தம்: பரவும் வீடியோ சர்ச்சை.!

ராஜா ராஜ சோழானால் தஞ்சையில் பெரிய கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் தொழில்நுட்பத்தால் கூட விளக்க முடியாத புதிராக இருக்கின்றது. இது தஞ்சை பெரியகோயில் எனவும், பெரியவுடையார் கோயில் அழைக்கப்படுகின்றது.

இந்த கோயிலில் பெரும் பாலும் தமிழ் எழுத்துக்கள் அதாவது தமிழ் பிராமி எழுத்துக்களால் கட்டு வெட்டுகள் 100 சதவீதம் பொறிக்கப்பட்டுள்ளது.

தற்போது புரனமைப்பு பணிகள் நடப்பதாக கூறப்படுகின்றது. கோயில் இருந்த தமிழ் கல்வெட்டுகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும் அங்கு ஹிந்தி கல்வெட்டுகள் புகுத்தப்பட்டு வருகின்றது. இதுகுறித்து வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜா சோழன் கட்டினார்:

கிபி 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் ராஜராஜ சோழன் அருள்மொழிவர்மன் இக்கோயிலைக் கட்டுவித்தார். 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன. இக்கோயில் தமிழகத்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

தமிழர்களின் ஓவியக்கலை:

தனித்துவமான தென்னிந்தியக் கோயில் கட்டிடக்கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தென்னிந்தியாவில் தமிழர்களின் நாகரிகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

தமிழ் கல்வெட்டு :

கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும், மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன. தமிழர்கள் மற்றும் சோழ மன்னர்களின் வாழ்வியல் முறைகளையும் எழுத்துரைக்கும் வகையில், தமிழ் பிராமிய எழுத்துக்களால் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

பரவும் வீடியோ:

தஞ்சை பெரிய கோவில் சுற்றுச்சுவர்களில் தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் அகற்றப்பட்டு, அங்கு ஹிந்தி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் பொருத்தப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.

தொல்லியல்துறை மறுப்பு:

தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டு இந்தி கல்வெட்டுகள் வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை மறுத்துள்ள தொல்லியல்துறையினர், அவை மராட்டிய கல்வெட்டுகள் என விளக்கமளித்துள்ளனர். மேலும் அறை ஒன்றில் ஹிந்தி கல்வெட்டுகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் வீடியோவில் பேசும் விஷமிகள் கூறியிருந்தனர். இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள தொல்லியல் துறையினர், அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளனர்.

ஆங்கிலேயர்களின் ஆட்சி:

தஞ்சைப் பகுதியை முதலில் சோழர்களும் பின்னர் மதுரை நாயக்க மன்னர்களும் ஆட்சிபுரிந்துள்ளனர். அவர்களுக்குப் பின் மராட்டியர்களின் வசம் வந்த தஞ்சை, 17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆளுமையின் கீழ் வந்தது.

தேவநாகரி எழுத்துக்கள்:

இந்த நிலையில், தஞ்சையை ஆண்ட ஒவ்வொரு பேரரசுகளைச் சேர்ந்தவர்களும் தத்தமது மொழியில் கல்வெட்டுகளை எழுதிச் சென்றுள்ளனர். அந்த வகையில் மராட்டியர்கள் ஆண்ட காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகளே சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவில் காட்டப்படுபவை என்றும் மேலும் அவை ஹிந்தியல்ல, மராட்டிய மொழியில் உள்ள தேவநாகரி எழுத்துகள் என்றும் தொல்லியல் துறையினர் கூறுகின்றனர்.

புனரமைப்பு பணியில் கிடைப்பு:

அதேபோல் திருச்சுற்று மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கோவிலின் கிரிவல பாதையில் பாரமாரிப்பு பணிக்காக தோண்டிய போது எடுக்கப்பட்டவை என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

வதந்தி வீடியோவை வெளியிட்ட விஷமிகள் குறித்து உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதுபோன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

tamil.gizbot.com

TAGS: