கேரளாவில் கைதான ரியாஸ் இவன் தான்: தமிழ் நாட்டில் 6 பேர் கொடுத்த தகவல்

ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கேரளாவில் கைதுசெய்யப்பட்ட இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, அவர் ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளது என இந்திய புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளார்கள். இலங்கையை தொடர்ந்து தமிழ நாட்டில் கோவையில் 6 சந்தேக நபர்களை இந்திய தேசிய புலனாய்வு கைதுசெய்தது. இவர்களை விசாரித்தே கோரளாவில் உள்ள ரியாஸை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள்.

இவர்கள் இணைந்து தமிழ் நாட்டில் உள்ள இந்து ஆண்மீக தலைவர்களை குறிவைத்து பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டு இருந்துள்ளார்கள். 6 இடங்களில் ஒரே நேரத்தில் தாக்கி பெரும் அழிவை தமிழ் நாட்டில் ஏற்படுத்தி இவர்கள் தீட்டி திட்டத்தை. இந்திய மத்திய புலனாய்வு துறையினர் கண்டு பிடித்து தடுத்துள்ளார்கள். இவர்கள் ஐ.எஸ் தலைவர் ஜஹ்ரான் ஹாஷிமின் பேச்சுக்களை கடந்த ஒரு வருடமாக கேட்டு வந்துள்ளார்கள். இதனை தமிழில் மொழி பெயர்த்து யூ ரியூப் வழியாக யார் பரப்புரை செய்து வருகிறார்கள் என்பது இன்றுவரை அறியப்படாத விடையமாக உள்ளது.

இதனை வைத்தே இந்திய புலனாய்வு நிறுவனம் கோவையில் இருந்த 6 பேரைக் கண்டு பிடித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

-athirvu.in

TAGS: