சோபியான் : லோக்சபா தேர்தலில் ஓட்டு போடுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என காஷ்மீரில் கிராம மக்களுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
காஷ்மீரின் சோபியான் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் மே 6 ம் தேதி 3 ம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பல பகுதிகளில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. உறுதி மொழியில் அச்சிடப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டர்களில், ஓட்டளிக்க சொல்லி ராணுவத்தினர் உங்களை கட்டாயப்படுத்துவார்கள். ஆனால் யாரும் ஓட்டுப் போட செல்லக் கூடாது. தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப் போடுபவர்கள் கொல்லப்படுவார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ராணுவ பள்ளிகளுக்கு அனுப்பக் கூடாது. எங்கள் தலைவர் ரியாஸ் நைகோ பலமுறை மீண்டும், மீண்டும் உங்களை ஓட்டுப் போடக் கூடாது என சொல்லி உள்ளார். ஆனால் சிலர் அதை கேட்கவில்லை. தற்போது உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது.
இனி ஓட்டளிக்க செல்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். அந்த வீடியோ பொதுவெளியில் வெளியிடப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
-dinamalar.com