சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீராதாரங்கள் வறண்டுவிட்டதால் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனது. இதனால் தமிழகத்தில் கோடை காலம் வருவதற்கு முன்பே தண்ணீர் பஞ்சம் வந்துவிட்டது. கடந்த ஜனவரி மாதம் முதலே சில குடியிருப்புகளில் லாரி தண்ணீரை வாங்க தொடங்கிவிட்டனர்.
அது மட்டுமல்லாமல் ஜனவரி மாதம் முதலே வெயில் வதைக்க தொடங்கிவிட்டது.
கரையை கடக்கும்
வங்கக் கடலில் ஏப்ரல் மாதத்தில் 50 ஆண்டுகள் கழித்து ஒரு புயல் உருவானது. அதற்கு ஃபனி என பெயரிடப்பட்டது. இந்த நிலையில் இந்த புயல் தமிழகத்தை நோக்கி வந்து சென்னை அருகே கரையை கடக்கும் ென எதிர்பார்க்கப்பட்டது.
கடும் வெயில்
ஆனால் நம் துரதிருஷ்டம் நமக்கு முன்னால் சென்றுவிட்டது. புயல் தமிழகத்திலிருந்து டேக் டைவர்ஷன் போல் ஒடிஸாவை நோக்கி சென்றுவிட்டது. இதனால் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.
வீட்டுக்குள் முடக்கம்
இன்று கத்தரி வெயில் வேறு தொடங்கியிருப்பதால் ஆரம்பமே அசத்தல் என்பது போல் வேலூர், அரக்கோணம் ஆகிய ஊர்களில் 111 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடக்கின்றனர்.
இரு நாட்கள்
வெயில் கொளுத்தி வருவதால் சென்னையில் ஆங்காங்கே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் சென்னையில் இரு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் பஞ்சம்
இந்த நிலையில் சென்னைக்கு நீர் அனுப்பும் ஏரிகளான புழல், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டது. இதனால் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
லாரி தண்ணீர்
இந்த நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துவிட்டது. லாரிகள் மூலம் தண்ணீர் புக் செய்தாலும் அவை உடனடியாக கிடைப்பதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.