அக்னி வெயில்.. அனல் காற்று.. சாலைகளில் குறைந்த மக்கள் கூட்டம்!

கரூர்: அக்னி வெயில் தாக்கத்தால் சாலைகளில் பயணிக்க பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழகம் அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை காஞ்சிபுரம், நாகை, கரூர், வேலூர், திருவள்ளூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கொளுத்தும் வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருகிறது.

சமீபகாலமாக புயல் மழை வெயில் போன்றவை மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி செல்கின்றன.

அதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் தமிழகத்தில் அதிக அளவு வெப்ப அளவை பதிவு செய்யும் மாவட்டமாக சிறப்பு பெற்று வருகிறது.

குறிப்பாக பரமத்தி பகுதியில் அதிகளவான வெப்பம் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இன்று கரூரில் வெப்பத்துடன் கூடிய அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர்.

இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வெயிலுக்காக போடப்பட்ட பழக்கடைகள், கரும்புச்சாறு கடைகள் மற்றும் இளநீர் கடைகளும் கொளுத்தும் வெயிலால் வெறிச்சோடி காணப்பட்டன.

tamil.oneindia.com

TAGS: