எழுவர் விடுதலைக்கு மீண்டும் பச்சைக்கொடி காட்டிய நீதிமன்றம்: எதிர் மனுக்கள் நிராகரிப்பு; ஆளுநர் கையில் முடிவு!

எழுவர் விடுதலை பற்றி தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என்று இந்திய உச்ச நீதிமன்றம், அவர்கள் விடுதலைக்கெதிரான மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

எழுவரை விடுவிக்கக் கூடாது என உத்தரவிடக்கோரி காங்கிரஸ் கட்சியின் அமெரிக்கை நாராயணன், இராம சுகந்தன் உள்ளிட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்தே மேற்படி உத்தரவை உச்ச நீதிமன்றம் விடுத்துள்ளது.

இதன்படி தமிழக ஆளுநர் முடிவின்படி எழுவரையும் விடுதலை செய்யும் நிலைமை காணப்படுவதாக இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

-athirvu.in

TAGS: