மம்தா பானர்ஜி: ‘வறுமை நிலையில் இருந்து முதல்வர் ஆனவர்’ – 10 தகவல்கள்

மம்தா பானர்ஜி குறித்த சில தகவல்களை இங்கே பகிர்கிறோம்.

  • *மம்தா பானர்ஜி 15 வயதில் அரசியலுக்கு வந்தார்.
  • *கொல்கத்தா ஜொக்மயா தேவி பெண்கள் கல்லூரியின் மாணவர் தலைவராக உருவெடுத்தார்.
  • *இளமையில் மிகவும் வறுமையில் மம்தா வாடியதாக அவர் குறித்த ஒரு சுயசரிதை நூல் கூறுகிறது.வீட்டு தேவைகளுக்காக அவர் பால் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார்.
மம்தா பானர்ஜி குறித்த 10 தகவல்கள்
  • *அவர்தான் இந்தியாவின் முதல் பெண் ரயில்வே அமைச்சர் மற்றும் மேற்கு வங்கத்தின் முதல் பெண் முதல்வர்.
  • மம்தாவின் அரசியல் வாழ்வானது காங்கிரஸ் கட்சியிலிருந்துதான் தொடங்கியது.
மம்தாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
  • *மூத்த இடதுசாரி தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை வீழ்த்தி அவர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
மம்தா
  • *பின் காங்கிரஸிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை நிறுவினார்.
  • *மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரி அரசை வீழ்த்தியவர் மம்தா. எளிமையான தலைவர் என்ற பிம்பம் மம்தாவிற்கு உள்ளது. ஆனால், மூர்க்கமான தலைவராகவே கருதப்படுகிறார்.
மம்தா பானர்ஜி குறித்த 10 தகவல்கள்
எதிர்கட்சி கூட்டணியின் முகமாக அவர் இந்த தேர்தலில் உருவெடுத்திருக்கிறார். மகாகத்பந்தன் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால, பிரதமர் பதவிக்கான போட்டியில் மம்தாவும் இருப்பார்.
நரேந்திர மோதியை எதிர்த்து தீவிர அரசியல் செய்பவர் என்ற அடிப்படையில் அவர் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். இந்த தேர்தலில் மம்தா ஒரு கிங் மேக்கராக ஆகலாம்.
-BBC_Tamil
TAGS: