நாடு பிரிவினைக்கு நேரு காரணம் : பா.ஜ., எம்.பி.,

முகமது அலி ஜின்னாவை பிரதமராக அறிவித்திருந்தால் இந்தியா பிரிவினை அடைந்திருக்காது என ம.பி., மாநில பா.ஜ. வேட்பாளர் குமன்சிங் தோமர் கூறி உள்ளார்.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் 6-வது கட்டமாக ம.பி., மாநிலத்தில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள ரத்லம் தொகுதியில் பா.ஜ., சார்பில் குமன்சிங்தோமர் என்பவர் போட்டியிடுகிறார்.
தேர்தல் பிரசாரத்தின் போது அவர் கூறியதாக ஏ.என். ஐ., வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

நாடு பிரிவினைக்கு யார் பொறுப்பு என்றால் அது காங்கிரஸ் கட்சியையே சேரும். முகமது அலிஜின்னா ஒரு வக்கீலாக மட்டுமல்லாது அறிஞராகவும் திகழ்ந்துள்ளார். நாடுசுதந்திரம் அடைந்த நேரத்தில் அவரை பிரதமர் பதவியில் அமர வைத்திருந்தால் நாடு பிரிவினை அடைந்திருக்காது. அதே போல் சர்தார் வல்லபாய் படேலை பிரதமராக நியமத்திருந்தால் ஜம்முகாஷ்மீர் நிலைமை மாறி இருந்திருக்கும். நாடு சுதந்திரம் அடைந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியைசேர்ந்த நேரு பிரதமர் ஆவது பற்றி உறுதியாக கூறவில்லை.இதனாலேயே நாடுபிரிவினைக்குள்ளானது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

-dinamalar.com

TAGS: