பாலகோட் பதிலடி பலி 170 – இத்தாலி செய்தியாளர்

புதுடெல்லி ; காஷ்மீரில் உள்ள புல்வாமா மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதில் 170 பேர் வரை இறந்திருக்கலாம் என்று இத்தாலி செய்தியாளர் பிரான்சிஸ்கா மரினோ உறுதிப்படுத்தியுள்ளார்.

புல்வாமா :

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், பயங்கரவாதிகள் இந்திய ராணுவ வாகனங்களின் மீது மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பழி தீர்க்க இந்திய விமானப்படை பாக்., எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. பாலகோட் என்ற இடத்தில் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி முற்றிலும் அழித்தது.

ஆனால், இந்த தாக்குதலை பாக்., தொடர்ந்து மறுத்து வருகிறது. மரங்கள் மட்டுமே குண்டுவீச்சில் அழிந்ததாகவும், எவரும் சாகவில்லை என்றும் தொடர்ந்து பாக்., தரப்பில் மறுக்கப்பட்டு வருகிறது. இதனை சமூக வலைத்தளங்களிலும் பலர் ஆதாரம் கேட்டு அரசியலாக்கி வருகின்றனர்.

அபிநந்தன் :

ஆனால், இந்திய விமானப்படை தாக்குதல் உண்மை. எண்ணிக்கை உறுதியாகத் தெரியவில்லை என்று விளக்கம் அளித்திருந்தது. தொடர்ந்து இந்திய விமானி அபிநந்தன் பாக்., விமானத்தை சுட்டு வீழ்த்தி எதிர்பாராத விபத்தில் பாக்., படையினரிடம் சிக்கினார்.

இந்தியாவில் தேர்தல் காலம் என்பதால், பா.ஜ., அரசுக்கு எதிராக பேசுவதாக நினைத்து ராணுவ நடவடிக்கையை பலர் கேலி பேசி வருவது தேசபக்தர்களை அதிர்க்குள்ளாக்கி இருந்தது. இந்த நிலையில் முதல் முறையாக இத்தாலி பத்திரிகையாளர் ஒருவர், பாலகோட் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்டிங்கர் ஆசியா என்ற இணையதளத்தில் அவர் எழுதி உள்ளதாவது: ” இந்திய ராணுவத்திற்கு வந்த பயங்கரவாதிகளின் முகாம் குறித்த தகவல்களின் அடிப்படையில், கடந்த 2019 பிப்ரவரியில் அதிகாலை 3.30 மணிக்கு பாக்., எல்லைக்குள் உள்ள பாலக்கோட்டில் புகுந்து இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆனால், பாக்., ராணுவம் அந்த இடத்திற்கு 6 மணிக்குத் தான் வந்தது.

170 பேர் பலி

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 45 பேர் ஷின்கியாரியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அதில் 20 பேர் வரை இறந்தனர். இப்போது வரை அங்கு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறைந்தபட்சம் 120 முதல் 170 பேர் வரையில் ஜெய்ஸ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பர்.

ஆப்கன் பயிற்சியாளர்கள்

இதில், ஆப்கானிஸ்தானில் இருந்து பயிற்சி அளிக்க வந்த சில பயங்கரவாதிகளும் அடக்கம். பலியான குடும்பத்தினருக்கு பணம் கொடுத்தும், பல்வேறு வகையிலும் பாக்., ராணுவம் இச்சம்பவத்தை மறைத்து வருகிறது. அங்குள்ள மக்களிடம் விசாரித்த போது, இப்போதுவரை அந்த தாக்குதல் நடந்த இடம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்,” என்று அவர் கூறியுள்ளார்.

சர்வதேச செய்தியாளர் ஒருவர், பாலக்கோட் தாக்குதலை உறுதி செய்திருப்பது, இந்திய ராணுவத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-dinamalar.com

TAGS: