சபரிமலை கோவிலில் 2 பெண்கள் நுழைய முயற்சி

பத்தனம்திட்டம்: சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் இரு பெண்கள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், ‘அனைத்து வயது பெண்களை அனுமதிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெண்கள், ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்றனர். இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கோவிலுக்குள் பெண்கள் நுழைய விடாமல் தடுத்தனர்.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 2 பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்தனர். அப்போது அங்கிருந்த பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் அவர்களை நுழைய விடாமல் தடுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் முயற்சியை கைவிட்டு அப்பெண்கள் திரும்பினர். இதனால் கோயிலில் மீண்டும் பரபரப்பு நிலவியது.

-dinamalar.com

TAGS: